+1 514-800-2610

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

2023-11-18 07:26
இலங்கைச் செய்திகள்

வவுனியா ஏ9 வீதி சாந்தசொலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப் பகுதிக்குள் திரும்ப முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வயதான திசாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி