கனடாவில் அதிக மக்கள் குடியேறுவதால் அங்கு சனத்தொகை அதிகமாவதுடன் மக்களும் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். குறிப்பாக இலங்கையிலிருந்து பல மக்கள் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் சென்று குடியேற பல வழிகளில் முயற்சிகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 70 இலட்ச கனேடிய மக்கள், கடந்த காலங்களில் உணவு இன்மை, உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சசினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாகவும், 18 % கனேடிய குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.