+1 514-800-2610

பனானா கெட்சப் பண்ணலாமா !!

2023-11-17 01:30
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம்- 3
பப்பாளிப்பழம்- 1
வெங்காயம்- ௧
சீரகம்- 5 கிராம்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
மிளகு- நான்கு பல்
பட்டை- 10 கிராம்
கிராம்பு- 3
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
வினிகர் - ஒரு ஸ்பூன்
சோடியம் பென்சோயட்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
இதனை தயாரிக்க வாழைப்பழத்தை தோல் நீக்கி கூழாக்க வேண்டும். அதன் பிறகு பப்பாளி பழத்தை மிக்சி ஜாரில் போட்டு கூழாக்க வேண்டும்.இப்போது வாழைப்பழ கூழுடன் பப்பாளி பழக்கூழ் 30 சதவீதம் கலந்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், 10 கிராம் அளவுக்கு பட்டை, மூன்று கிராம், நான்கு பல் மிளகு, மிளகாய் தூள், 5 கிராம் சீரகம்
ஆகியவற்றை லேசாக அரைத்து மென்மையான துணியில் கட்டி நாம் ஏற்கனவே கலந்து வைக்கப்பட்ட வாழைப்பழ மற்றும் பப்பாளி பழச்சாறில் போட வேண்டும்.

பழக்கூழ் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை வேகவைத்து பின்னர் துணி மூட்டையை அகற்றி விட வேண்டும். அதன்பிறகு உப்பு, மீதமுள்ள சர்க்கரை,வினிகர், சோடியம் பென்சோயட் (கட்டாயம் இல்லை) ஆகியவற்றை சிறிது சேர்த்து கலக்க வேண்டும். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி பயன்படுத்தலாம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி