+1 514-800-2610

பாசி பயறு பர்பி பண்ணலாமா !!

2023-11-12 06:12
ஆரோக்கியம்

 

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 100 கிராம்
கடலைமாவு- 2 ஸ்பூன்
பால்- ஒரு டம்ளர்
சர்க்கரை- 100 கிராம்
ஏலக்காய்பவுடர்- ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க
நெய்- தேவைக்கேற்ப

செய்முறை:

பாசிப்பருப்பை கழுவி அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு துணியில் கொட்டி நிழலில் அரைமணிநேரம் உலர்த்த வேண்டும்.

அதன்பிறகு ஒரு துணியில் கொட்டி நிழலில் அரைமணிநேரம் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் கொட்டி நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு அதில் முதலில் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்க்க வேண்டும்.அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பு பொடியை சேர்க்க வேண்டும். இதனை பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்க வேண்டும்.இதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி, பொடித்த நட்ஸ் கலவையை சேர்க்க வேண்டும். அதன்பிறகு இதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றி சதுரம் சதுரமாக வெட்டி எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு பர்பி ரெடி.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி