ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் ''லால் சலாம்''. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை முதன்மைபடுத்தியே ''லால் சலாம்'' திரைப்படம் உருவாகியுள்ளது. மொய்தீன் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதோடு ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டு உரிமத்தை தனதாக்கியுள்ளது. மேலும் லால் சலாம் திரைப்படம் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 10.45 மணிக்கு திரைக்கு வரவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.