+1 514-800-2610

சில காரணங்களால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டால் ... !!

2023-11-10 02:48
விளையாட்டுச் செய்திகள்

சில காரணங்களால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டால் 6 மாத காலத்திற்கு அர்ஜுன ரணதுங்கவிடம் ஒப்படைத்துவிட்டு உத்தியோகபூர்வ தேர்தல் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை சர்வதேச தடைக்கு உட்படுத்தும் முயற்சி இடம்பெறுவதாக இன்று (10) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாகவும் அதிலிருந்து நீதியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சட்டமா அதிபர் மீது வைத்துள்ள நம்பிக்கை தற்போது உடைந்துள்ளதாக தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயத்தை கையாள்வதாகவும் தெரிவித்தார்.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி