அறம் மற்றும் மனுஷி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படமொன்றை இயக்குகின்றார். இப்படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் ஏ.ஜி.எல் நிறுவனத்தோடு ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது. படம் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளதோடு இப்படத்தின் தலைப்பு ''கருப்பர் நகரம்'' என பெயரிடப்பட்டுள்ளதோடு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.