அமெரிக்கா மற்றும் கனடாவிற்க்கு இடையில் தடுப்பு சுவர் அமைக்கும் திட்டம்!!
2023-11-09 10:45
கனடிய செய்திகள்
அமெரிக்காவில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான, விவேக் ராமசாமி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மியாமியில் இடம்பெற்ற விவாதத்தின் போது அமெரிக்கா மற்றும் கனடாவிற்க்கு இடையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சட்டவிரோதமான போதை பொருள் மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த தடுப்பு சுவர் அமைய வேண்டும் என கூறியுள்ளார்.