+1 514-800-2610

ஊராபொல பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !!

2023-11-08 00:22
இலங்கைச் செய்திகள்

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி