கனடா நாட்டின் அரசாங்க பணியாளர்களால் நேற்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்று கியூபெக்கில் ஆரம்பமாகியது.
அரசாங்க பணியாளர்கள் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை தொடர்பில் கியூபெக் மாகாணம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே நாங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.
மேலும் கியூபெக் மாகாண அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் விரைவில் கிடைக்காவிடில் எங்களது போராட்டம் வருகின்ற 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் நான்கு இலட்ச அரச ஊழியர்கள் ஈடுப்பட்டதோடு பாடசாலை, சுகாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த நலன்புரி சேவைகள் ஆகியன பெரிதும் பாதிப்படைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.