காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்றைய தினம் திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளனர்.
அதன்போது உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் , உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளாகத்தை பார்வையிட்ட பின்னர், சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் தூதுவரினால் மக்களுக்கு விளக்கமளித்ததுடன் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சீனத்தூதுவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.-