+1 514-800-2610

மாந்தை மேற்கு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு !!

2023-11-07 02:07
இலங்கைச் செய்திகள்


அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை 9.30 மணி தொடக்கம் 12 மணி வரை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழ்வுதயம் சூழல் பாதுகாப்பு பிரிவின் அனுசரனையுடன் மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சி. கனியூட் அரவிந்ராஜ் ஆரம்பித்து வைத்தார்.

கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என 70 வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.அருள்மலர் அந்தோனிப்பிள்ளை 'மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்புகள், கடமைகள், சுற்றாடல் சார் சட்டங்கள், அனுமதிகள்' தொடர்பான கருத்துரை வழங்கினார். இறுதியில் பொது கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி