+1 514-800-2610

சிறப்பாக இடம்பெற்றுவரும் கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா !!

2023-11-07 01:22
இலங்கைச் செய்திகள்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கலாச்சார பேரவை இணைந்து நடாத்தும் 2023 ம் ஆண்டுக்கான கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமா மகள் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த பிரதேச பண்பாட்டு விழாவில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( நிர்வாகம்) கனகசபாபதி கனகஏஸ்வரன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) சிவபாலன் குணபாலன் அவர்களும் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சந்திரசேகரன் ஜசிந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேச கலைஞர்களுடைய பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் கலை ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி