+1 514-800-2610

Home made ரிச்சான கோக்கனெட் சீஸ் கேக் !!

2023-11-07 01:09
ஆரோக்கியம்


தேவையான பொருட்கள்:
பிஸ்கெட்- 250 கிராம்
வெண்ணெய்- 100 கிராம்
சீஸ் கிரீம்- 500 கிராம்
க்ரீம்- 250 கிராம்
தேங்காய் பொடி- 100 கிராம்
ஒயிட் சாக்கலேட்- 250 கிராம்
ஜெலட்டின் 2 ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரில் பிஸ்கெட்டுகளை போட்டு நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெண்ணெயை உருக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனை கேக் மோல்டில் பேஸ்மெண்டாக போட வேண்டும்.

அதன்பிறகு மற்றொரு பாத்திரத்தில் சீஸ் கிரீம் மற்றும் கிரீம் போட்டு நன்றாக கலக்க வேண்டும் இதனுடன் ஒயிட் சாக்லேட்,தேங்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அதனையும் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பிஸ்கெட் பேஸ்மெண்டில் ஊற்ற வேண்டும்.

அதற்கு மேல் ஊற்றுவதற்காக ஒரு ஒயிட் சாக்லேட்டில் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறி அதனையும் டாப்பிங்கிற்காக ஊற்ற வேண்டும்.

பின்னர் தேங்காய் பொடியை பரவினாற்போல் தூவி விட வேண்டும்.

அதன்மேல் விரும்பினால் நட்ஸ் கலவையையோ அல்லது பொடித்த நட்ஸ்களையோ தூவலாம்.

இந்த கலவையை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம். சுவையான கோக்கனெட் சீஸ் கேக் தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி