இன்றைய உலகக்கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சோதனைக்கு பின்னர் நடைபெறும் !!
2023-11-06 00:58
விளையாட்டுச் செய்திகள்
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (06) நடைபெற உள்ளது.
இப்போட்டி டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
எனினும், டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதால், ஆய்வுக்குப் பிறகு போட்டி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் அணியுடனான போட்டி தொடர்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் இந்த கருத்தை வெளியிட்டார்.