+1 514-800-2610

மன நலனுடன் தொடர்புபடும் நிறங்கள் !!

2023-11-05 01:05
ஆரோக்கியம்

நம்முடைய மன நலனுக்கும் நிறங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்புள்ளது .இந்த சிகிச்சையையை ' கலர் தெரபி' என்பர் .

சுயமாகவும் கலர் தெரபி செய்யலாம் .

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? சிவப்பு நிறத்தில் உடை, சிவப்பு நிற ஷு அணிந்து செல்லலாம். சிவப்பு நிற துண்டு, சிவப்பு வண்ண தண்ணீர் பாட்டில், சிவப்பு நிற பேக் எடுத்து செல்லலாம்.
அங்கு உடற்பயிற்சி செய்யும்போது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை சிவப்பு மற்றும் கருப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும்.அதில் இருந்து மீளவைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டு செல்லும்.

நீண்ட நாள் கனவான விரும்பிய வேலைக்கு நேர்காணல் செல்கிறீர்களா?
சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடையை உடுத்தி செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. தன்னம்பிக்கைதரும்.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. பெண்கள் தங்கள் துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கலாம்.

ஏதாவதொரு காரியத்தில் கவனம் செலுத்தும்போது நீல நிறத்தை தேர்வு செய்யலாம். அது அமைதியான மனநிலைக்கு வித்திடும்.

சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும்போது ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்யலாம்.அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் சிறந்த தேர்வாக இருக்கும்.அது விழாவுக்கான உற்சாகத்தை அதிகப்படுத்தும். அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி