உலகில் காணப்படும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப்பும் ஒன்றாகும்.
வாட்ஸ்அப் செயலியில் தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சம் ஆகும்.
இதை கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் வீடியோக்களை டபுள்டேப் செய்து ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லலாம்.
இதன் மூலம் நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
இந்த அம்சம் குறித்த விவரங்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம் பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில், எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.
புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.6 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் கொண்டு வீடியோக்களை ஃபார்வேர்டு மற்றும் பேக்வேர்டு செய்ய முடியும்.
இது குறித்த ஸ்கிரீன்ஷாட்களை WAbetainfo வெளியிட்டு உள்ளது.