+1 514-800-2610

செப்டெம்பரில் 168 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்-எரான் விக்ரமரத்ன

2023-10-25 06:26
இலங்கைச் செய்திகள்

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் 168 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குறைந்தது 41% பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன,

இந்த ஆண்டு செப்டெம்பரில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ​​அது ஒரு அதிகரிப்பை காட்டுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்