+1 514-800-2610

காசா மீது தொடர் தாக்குதல் .....

2023-10-23 04:27
உலகச் செய்திகள்

காசாவிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அருகில் கடந்த சில மணித்தியாலங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டமை தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

காசாவின் மிகப் பெரிய வைத்தியசாலைகளான அல்-ஷிஃபா, அல்-குட்ஸ் மற்றும் இந்தோனேசிய வைத்தியசாலை என்பவற்றுக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் இராணுவத்தினரால் குறித்த வைத்தியசாலைகளுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளிகளையும் ஹமாஸ் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தங்களது ஆதரவை மீண்டும் வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்