+1 514-800-2610

இனி பணம் இருந்தால்தான் twitter ஐ பயன்படுத்த முடியும்.....

2023-10-22 03:27
தொழில்நுட்பம்

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ட்விட்டர் நிறுவனம் சமீபகாலமாக அதிரடியான மாற்றங்களை செய்துவருகிறது.

இந்நிலையில் பயனர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை பரிசோதனை அடிப்படையில் முன்னெடுக்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய கட்டண திட்டத்தின்கீழ், ட்விட்டர் வலைத்தள பதிப்பில் லைக்குகள், மறுபதிவுகள் அல்லது பிற கணக்குகளின் இடுகைகள் மற்றும் புக்மார்க்கிங் இடுகைகளுக்கு பயனர்களிடம் கட்டணம் அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலாக நியூசிலாந்து , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆனால் கட்டணம் செலுத்த விரும்பாத புதிய பயனர்கள், பதிவுகளை பார்க்கவும் படிக்கவும், வீடியோக்களை பார்க்கவும் மற்றும் கணக்குகளை பின்தொடரவும் மட்டுமே முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியா , இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி