Windows 11க்கான Paint Appஇல் Photoshopஇல் காணப்படுவது போன்று, ஒரு புகைப்படத்தில் உள்ள Backgroundஐ மிகவும் எளிதாக நீக்கிக்கொள்ளக்கூடிய புதிய வசதியொன்று அறிமுகமாகியுள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் எந்தவொரு படத்தின் பின்னணியையும் ஒரே Clickஇல் எளிதாக நீக்கிக்க்கொள்ள முடியும்.
நீங்கள் Paint Appஇல் குறித்த புதிய வசதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், முதலில் Microsoft Store மூலம் 11.2306.30 என்கின்ற புதிய Versionஐ Update செய்துகொள்ள வேண்டும்.
புதிய Versionஐ Update செய்துகொண்ட பின்னர் Paint Appஐ Open செய்து நீங்கள் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் படத்தின், மேல் இடதுபுறத்தில் காணப்படும் Background Remove Buttonஐ தெரிவுசெய்துகொள்ள வேண்டும், அதன்பின்னர் குறித்த படத்தில் உள்ள Backgroundஐ மிகவும் எளிதாக நீக்கிக்கொள்ள முடியும்.
குறித்த புதிய வசதியானது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.