விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ''மார்க் ஆண்டனி ''
'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, "மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்.
'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அவரை சந்தித்ததற்கு பின் எனது மனநிலை மாறிவிட்டது.
உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கை அளித்தது அவர்தான்" என்று பேசினார்.