கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ''துருவ நட்சத்திரம் ''.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்திருக்கும் 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.