போர்த்துக்கல்லில் உள்ள Sao Lorenco de Bairro நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய நகரத்தின் தெருக்களில் சிவப்பு வைன் நதி ஓடத் தொடங்கிய அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
நகரத்தில் உள்ள செங்குத்தான மலையிலிருந்து லெவிரா டிஸ்டில்லரிக்கு சொந்தமான மில்லியன் கணக்கான லிட்டர் வைன் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை குடியிருப்பாளர்கள் திகைத்துப் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரத்தின் பாதைகளில் முடிவில்லாத வைன் நதி ஓடுவதை வீடியோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த மர்மமான வைன் நதி நகரின் மையப்பகுதியில் உள்ள ஆலையில் இருந்து உருவானது, அங்கு 2 மில்லியன் லிட்டர் சிவப்பு வைன் கொண்ட பீப்பாய்களை சுமந்து செல்லும் தொட்டிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது என நிவ்யோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தை நிரப்பக்கூடிய வைன் நதி கசிவு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்றதால் சுற்றுச்சூழல் எச்சரிக்கையையும் எழுப்பப்பட்டுள்ளது .
வைன் ஆறு நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்பு டிஸ்டில்லரிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
லெவிரா டிஸ்டில்லரி வினோதமான சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, நகரத்தில் மது நனைத்த நிலத்தை தோண்டி எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
"சேதத்தை சுத்தம் செய்தல் மற்றும் சரிசெய்வது தொடர்பான செலவுகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் உறுதியளித்துள்ளது .