கடந்த வருடம் வெளியான "புஷ்பா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேட்ப்பை பெற்றது எனலாம். இப்படம் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ஃபகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளியானது.
இதனை தொடர்ந்து "புஷ்பா" திரைப்படத்தின் இரண்டாவது பாகமான "புஷ்பா-தி ரூல்" படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதோடு, அண்மையில் இப்பட போஸ்டர், டைட்டில், டீசர் என்பன வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் புஷ்பா - 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் திகதி திரைக்கு வரும் என படக்குழு போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளது.