+1 514-800-2610

''ஜெயிலர்'' படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயம் பரிசு !!

2023-09-11 02:39
சினிமா செய்திகள்

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ''ஜெயிலர்''.

இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது.

இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில், ஜெயிலர் படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தங்க நாணயம் வழங்கி சிறப்பித்தார்.

மேலும், சக்சஸ் மீட்டை தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி