+1 514-800-2610

மொரோக்கோ வாழ் கனடியர்கள் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....

2023-09-10 17:52
கனடிய செய்திகள்

மொரோக்கோ வாழ் கனடியர்கள், கனடிய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மொரோக்காவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக ஜோலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மொரோக்காவிலுள்ள கனேடியர்கள் உதவி தேவைப்பட்டால் அரசாங்கத்துடன், தூதரகம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது மொரோக்காவில் இருந்த கனேடியர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை கனடா ஆரம்பித்துள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி