கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா .
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம் .
8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'ஜிகர்தண்டா -2' திரைப்படத்தின் டீசர் 11-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.