ஜிகர்தண்டா -2 திரைப்படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது!!
2023-09-09 10:28
சினிமா செய்திகள்
ஜிகர்தண்டா திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் மதுரையை களமாக கொண்டு 2014 ஆம் ஆண்டு வெளியானது. சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர்.
எட்டு வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. "ஜிகர்தண்டா -2 " படத்தின் டீசர் 11-ஆம் திகதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாவுள்ளது என கூறியுள்ளனர்.