மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரில் இன்று காலை 10.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, மியான்மரில் கடந்த ஒகஸ்ட் 21ஆம் திகதி 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.