கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நாளைய தினமும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்று நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஏற்கனவே தோண்டப்பட்ட புதை குழியிலுள்ள மண் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் முக்கியமாக தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில் சர்வதேச மற்றும், ஐ.நாவின் கண்காணிப்புக் குழுக்கள் இல்லாமல் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதில் தங்களுக்க திருப்தி இல்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதைகுழி எலும்பு கூடு என தெரிந்தும் அகழ்வு பணியை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் எலும்பு கூட்டுக்கு உயிரா கொடுக்க போகின்றீர்கள் என சமூக செயற்பாட்டாளர் சுந்தரம்பிள்ளை சிவமணி கேள்வி எழுப்பியுள்ளார்.