மொன்றியல் மற்றும் ஒட்டாவாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கியூபெக்கின் மணிவாகியின் (Manivaqui,)கிழக்கே 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கியூபெக்கின் மணிவாகியின் (Manivaqui,)கிழக்கே புதன்கிழமை மையமாகக் கொண்ட ஒரு சிறிய நிலநடுக்கம் ஒட்டாவா மற்றும் மொன்றியல் வரை உணரப்பட்டுள்ளது , ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
கனடாவிற்கான நிலா நடுக்க மையம்(Earthquakes) கூற்றுப்படி, 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நண்பகலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. அதன் மையப்பகுதி கியூபெக்கின் எல்’அனோன்சியேஷன் தென்மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், ஒட்டாவாவில் இருந்து வடகிழக்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, எர்த்வேக்ஸ் கனடாவுக்கு ஒட்டாவா மற்றும் மொன்றியலில் இருந்து வந்த அறிக்கைகள் உட்பட, நிலநடுக்கம் குறித்து சுமார் 2,000 அறிக்கைகள் கிடைத்துள்ளன . சேதம் குறித்த எந்த அறிக்கையும் குறித்த நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.5 முதல் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அடிக்கடி உணரப்படுகின்றன, ஆனால் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சேதம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கடந்த டிசம்பரில், கனடாவிற்கான நிலா நடுக்க மையம் மணிவாக்கிக்கு வடக்கே 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை பதிவு செய்தது.
