Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி

ஜூன் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) குடியிருப்புப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் முகமது லமீன் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) என்ற பெயருடைய காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்.

இவர் 2021-ஆம் ஆண்டு முதல் மொன்றியல் பொலிஸ் படையில் (SPVM) பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் ஜன்னல் வழியாகத் துப்பாக்கி ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீது, ஆயுதம் தாங்கிய நபர் பதுங்கியிருந்து தாக்குதல்  நடத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகளின்படி, முழு இராணுவ உடையில் வந்த துப்பாக்கிதாரி, நீண்ட ரகத் துப்பாக்கியால் காவல்துறையினர் மீது சரமாரியாகச் சுட்டுள்ளார்.

மொன்றியல் பொலிஸ் வரலாற்றில் கடந்த 24 ஆண்டுகளில் கடமையின் போது ஒரு காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அவருடன் யூத கனேடியச் சமூகத்தைச் சேர்ந்த மைக்கேல் மிஸ்ராகி (Michael Mizrahi) என்ற பொதுமகன் ஒருவரும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பதில் தாக்குதலில் அந்த துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற மற்றொரு பெண் காவல்துறை அதிகாரி படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அந்த பெண் காவல்துறை அதிகாரியின் நிலைமை சீராக உள்ளதென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாக்குதல் நடத்திய நபர் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து 100 பக்கங்களுக்கும் அதிகமான வன்முறைக் கொள்கை அறிக்கை (Manifesto) கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலையாளி பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் தீவிரவாத கொள்கை கொண்டவர் என்பதும், ஆபாசத் திரைப்படத் துறையை ஒழிப்பதற்காகவே இத்தாக்குதலை திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த கட்டிடம், ‘போர்ன்ஹப்’ (Pornhub) ஆபாசக் காணொளி இணையதளத்தின் தாய் நிறுவனமான ‘அய்லோ‘ (Aylo) நிறுவனத்தின் தலைமையகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10 புதிய அணு உலைகள் கட்டமைப்பு – இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டிம் ஹாட்ஸன் (Tim Hodgson) அறிவிப்பு
அடுத்த செய்தி மொன்றியல் காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா முழு பலத்துடனும் போராடும் -பிரதமர் மார்க் கார்னி !

ஏப்ரல் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சொலிடேர்’ கட்சியின் முக்கிய அறிவிப்பு

மே 11, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …

ஏப்ரல் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?