இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காகக் கொண்டு, அணியை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளிடம் உள்ளதாகவும் சங்கக்கார பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் நேற்று (22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை, ஒரு பந்து மாத்திரம் (49.5 ஓவர்கள்) மீதமிருக்க, இலங்கை அணி துடுப்பாடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

