இன்றும் நாளையும் பனிப்பொழிவு நிலவும் சூழலில், வீடுகளில் அனைவரும் தங்கியிருக்க வேண்டும் என மொன்றியல் நகராட்சி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று பனி புயலால் நகரத்தில் கொட்டப்பட்ட இரண்டாவது சுற்று பனியை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால், திங்கட்கிழமை மாலை வரை முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு மொன்றியல் நகராட்சி குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
“வீட்டிலேயே இருங்கள், உங்களுக்காக நாங்கள் வேலையைச் செய்வோம்” என மொன்றியல் நகராட்சி செய்தித் தொடர்பாளர் பிலிப் சபோரின், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திங்கள் காலை வரை மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் நகரம் சுமார் 40 சென்டிமீட்டர் பனியைத் தாங்கும் நிலையில் உள்ளன. சனிக்கிழமை மாலை பனிப்பொழிவு தொடங்கி இன்று காலை தீவிரமடைந்தது.
கிழக்கு டவுன்ஷிப்களுக்கு 50 சென்டிமீட்டர் மற்றும் காஸ்பே தீபகற்பத்திற்கு 70 சென்டிமீட்டர் பனிப்பொழிவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பனி அகற்றும் குழுக்கள் இன்று பிற்பகல் 2 மணிக்குள் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் நகர வீதிகளில் பணியை அகற்ற முடிந்ததாக சபோரின் தெரிவித்துள்ளார் . ஆனால், திங்கள் வரை பனி பொலிவு நீடித்ததால், நகராட்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், செயிண்ட் லாரன்ஸ் மற்றும் காஸ்பே தீபகற்பத்தில் தெற்கு மற்றும் மத்திய கியூபெக்கின் பெரும்பகுதிக்கு கனடா பனிப்புயல் எச்சரிக்கையை வெளியிட்டது. குறைந்தது நான்கு மணிநேரங்களுக்கு பரவலாகக் குறைந்த தெரிவுநிலை எதிர்பார்க்கப்படும் போது, நிறுவனம் இந்த வகையான எச்சரிக்கையை வெளியிடுகின்றமை குறிப்பிட்டதக்கது.