

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
மயூரி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.