+1 514-800-2610

ஏன் கொண்டாடப்படுகிறது ரக்ஷாபந்தன் !!

2023-08-30 04:05
இந்திய செய்திகள்

இந்தியாவில் வெகு விமர்சையாக பல கொண்டாட்டங்கள் இடம்பெறுவது வழக்கம் .

அவற்றுள் முக்கியமான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது ரக்ஷாபந்தன் .

ரக்ஷாபந்தன் அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள்.

சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

உங்களில் எத்தனை பேருக்கு ரக்ஷாபந்தன் ஏன் கொண்டாடப்படுகின்றது என்று தெரியுமா !

மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த இரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள்.

இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது.

அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

அதன்படியே கௌரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர்.

அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி