+1 514-800-2610

இலங்கைக்கு வருகை தரும் சீன உயர்நிலைக் குழுவும் - பொருளாதார சிக்கலில் திண்டாடும் இலங்கையும்..!!

2020-10-09 15:30
இலங்கைச் செய்திகள்

மாலதி தமிழ்ச்செல்வன்

சீனாவிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் ஒருங்கிணைந்த கடனின் இரண்டாவது தவணையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் சீன அதிகாரிகளின் உயர்நிலைக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை தனது அந்நிய செலாவணி இருப்பை உயர்த்த போராடி வரும் நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான உயர் அதிகார சீனக் குழு இலங்கை வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் இருந்து தெற்காசிய பிராந்தியத்திற்கு பயணம் செய்யும் முதல் சீன அதிகாரியாக சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சி (Yang Jiechi) என்று கூறப்படுகிறது.

யாங் தலைமையிலான சீனக் குழு, இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சீனாவிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் ஒருங்கிணைந்த கடனின் (syndicated Chinese loan) இரண்டாவது தவணையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் சீன அதிகாரிகளின் உயர்நிலைக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வாரம் இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் அளவுக்கு மூடிஸ் (Moody's) குறைத்தது. அதையடுத்து, எதிர்பார்க்கப்பட்ட பாண்டா பத்திரங்கள் (Panda (Chinese) bonds) மற்றும் ஒருங்கிணைந்த சீனக் கடன் (syndicated Chinese loan) ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை சமன் செய்ய உதவும் என்று இலங்கை அரசு கூறியிருந்தது.

இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் குறைத்த மூடிஸ், இந்த தெற்காசிய நாடு தனது மிகப்பெரிய வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தீவு தேசமான இலங்கையின் பொருளாதார இன்னல்களை அதிகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இலங்கை "பி 2" (உயர் கடன் ஆபத்து) இலிருந்து "Caa1" (மிக அதிக கடன் ஆபத்து) என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

"அதாவது, இலங்கையின் வெளிநாட்டு கடன்களை அந்நாட்டு அரசாங்கத்தால் திரும்பச் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்ப்பதற்காக, இலங்கை இந்த இக்கட்டான நிலையை சமாளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசின் திறன் மற்றும் அதன் கடனை திருப்பிச் செலுத்தும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்" என்று இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் எதிர்வரும் காலங்கள் இலங்கை அரசுக்கு மிகவும் கடினமாகும் என்பது எந்தவித ஐயமுமில்லை.

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada