மெல்போர்னில் மறைந்த கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸுக்கு நினைவஞ்சலி..!!
2020-10-07 12:32
விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்சுக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நினைவஞ்சலி நடந்துள்ளது.ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் சென்ற மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நினைவஞ்சலி நடந்தது.இந்த நினைவஞ்சலி நிகழ்வில் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர்.
அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் அவருடைய டெஸ்ட் போட்டி எண் 324 என்னும் எண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.