+1 514-800-2610

வாங்க சாப்பிடலாம் சுவையான ரவை இனிப்பு பொங்கல்!!

2023-05-15 09:21
எம்மவர் நிகழ்வுகள்

தேவையான பொருட்கள்:

ரவை - 1/4 படி

அச்சு வெல்லம் - 12

நெய் - 5 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 12

காய்ந்த திராட்சை - 12

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

செய்முறை:

  • ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.
  • இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.
  • ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி