தேவையான பொருட்கள்
சாமை
திணை
வரகு
சிவப்பரிசி
பாசிப்பருப்பு தலா - 50 கிராம்
மோர் - 3 கப்
தண்ணீர் - 4 கப்
சின்ன வெங்காயம் - 8
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.
- இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும். *
- கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.
- பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும். உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.
- ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்...