+1 514-800-2610

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய அம்சத்தை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது..!!

2020-06-28 01:19
தொழில்நுட்பம்

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக் தனது சேவையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.  90 நாட்களுக்கு மேல் பழமையான கட்டுரை ஒன்றை பகிரும்போது, அது குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். வலைப்பதிவு இடுகையில் பேஸ்புக் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக The Verge என்ற செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் பகிரப்படும் உள்ளடக்கமானது, சரியான நேரத்தில் வெளியிடப்படுவதாகவும், அதிக நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய அம்சம்அறிமுகப்படுத்தப்படுகிறது.  

இருந்தபோதிலும், 90 நாட்கள் கடந்த பிறகும், அந்த குறிப்பிட உள்ளடக்கமானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், செய்தியை பயனர் தொடர்ந்து பகிரலாம். 

ஏனென்றால், தற்போது மிகவும் பழைய செய்தி கட்டுரைகள் கூட, சில சமயங்களில் தற்போதைய செய்திகளைப் போலவே பகிரப்படுவதால் சிலபல பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுகிறது.

இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவும், இதுபோன்ற கவலைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதால் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது.  மேலும், "தற்போதைய நிகழ்வுகளின் நிலையை தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தவிர்ப்பதற்கான முயற்சி இது" என்றும் பேஸ்புக் கூறுகிறது.

இந்த முன்முயற்சியின்படி, பேஸ்புக் தனது தளத்தில், ஒரு புதிய அறிவிப்புத் திரையை அறிமுகப்படுத்தும். இது பயனர்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கும் கட்டுரை 90 நாட்களுக்கு மேல் இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை விடுக்கும் என்று வியாழக்கிழமையன்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

"உலகளவில் ஒரு அறிவிப்புத் திரையை வெளியிடத் தொடங்குகிறோம், இது பயனர்கள் பகிரவிருக்கும் செய்தி கட்டுரைகள் 90 நாட்களுக்கு மேல் இருக்கும்போது, அந்தத் தகவலை மக்களுக்குத் தெரிவிக்கும்" என்று வலைப்பதிவு இடுகை (blog post) ஒன்றில் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடக தளமான பேஸ்புக், இதற்கு முன்னதாக,   2018 ஆம் ஆண்டில் செய்தி ஊட்டத்தில் (News Feed) உள்ள கட்டுரைகளின் ஆதாரங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் சூழல் பொத்தானை (context button)ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பயனர்கள் ஒரு தகவலின் அல்லது கட்டுரை வெளியிடப்பட்ட காலம்,நேரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எதைப் பகிர வேண்டும் என்பது குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் மக்களுக்கு இருப்பதை உறுதிசெய்ய, 90 நாட்களுக்கு மேல் உள்ள கட்டுரைகளில் share button மக்கள் கிளிக் செய்யும் போது அறிவிப்புத் திரை தோன்றும்.  ஆனால் அந்தக் கட்டுரையை தற்போதைய சூழலுக்கும் ஏற்றதாக இருப்பதாக பயனர் தீர்மானித்தால் மக்கள் தொடர்ந்து பகிர்வதற்கு அனுமதிக்கும் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பு என்ற நோக்கத்திற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

ஒரு கட்டுரையின் சூழலைப் புரிந்துகொள்வதிலும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதிலும் செய்தியின் நேரமானது முக்கிய பங்காற்றுவதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை அவசியமானது என்று பேஸ்புக் கூறுகிறது.

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada