+1 514-800-2610

தோல்விக்கான காரணத்தை அறிவிக்குமாறு அறிவிப்பு!!

2023-01-16 05:06
விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடும் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழு மற்றும் முகாமையாளர் ஆகியோரின் கருத்துக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த அறிக்கையை 5 நாட்களுக்குள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நேற்று (15) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 317 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஒருநாள் போட்டியில் ஒரு அணி பெற்ற மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி