இன்று நடை பெறவுள்ள மேரி-விக்டோரின் தொகுதி இடைத்தேர்தல் - வெற்றி பெருவாரா ஷோபிகா வைத்யநாதசர்மா..!!
மொன்றியலின் தெற்கு பகுதில் உள்ள மேரி-விக்டோரின் கியூபெக் மாகாண தேர்தல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்என்ஏ கேத்தரின் ஃபோர்னியர் இராயினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான இடை தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
இந்த தேர்தல் தொகுதியானது லாங்குவில் நகரத்தின் Vieux-Longueuil பெருநகரத்தை உள்ளடக்கியதாக இருப்பது குறிப்பிட்ட தக்கது. கியூபெக் மேரி-விக்டோரின் இடைத்தேர்தலில் பன்னிரண்டு வேட்பாளர்களை போட்டியிடுவதற்கு கியூபெக் தேர்தல் திணைக்களம் அங்கீகரித்துள்ளது.
இந்த இடை தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக ஷெர்லி டோரிஸ்மண்ட் ( CAQ ),
பியெர்ரே நண்டேல் (PQ),ஷோபிகா வைத்யநாதசர்மா (QS) மற்றும் பழமைவாத கட்ச்சியை சேர்ந்த அன்னே கேசபோன்னே ( Anne Casabonne )ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பு காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுவுள்ளது.இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 45,558 வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர்.
இந்த இடை தேர்தலில் போட்டியிடுகின்ற ஷோபிகா வைத்யநாதசர்மா வெற்றி பெறுவாரா பொறுத்திருந்து பாப்போம்.