T 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாமின் வெற்றி: பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவிப்பு..!!
2021-10-25 19:19
விளையாட்டுச் செய்திகள்
T 20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவில் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் திங்களன்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார், இந்திய முஸ்லிம்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் போட்டியின் போது தனது நாட்டுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.
"இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாத்தின் வெற்றி. உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்," என்று அவர் ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.