விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்த பிரபலங்கள் இப்போது இல்லையா என அதிர்ச்சியாகின்றனர்.
அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் இறந்தார். இப்போது விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியல் நடிகரின் மரண செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி BA நிகழ்ச்சியில் ஜாக்குலின் அப்பாவாக நடிக்கும் குட்டி ரமேஷ் மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார்.தற்போது சின்னத்திரையில் கால் பதித்த இவரின் இந்த மரணம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்போது சின்னத்திரை நடிகர்களின் மரணம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் திரையுலகம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கொரோனாவா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. இவரது மரண செய்தியை மட்டும் தொலைக்காட்சியே உறுதிப்படுத்தியுள்ளனர்.