யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொவிட் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 15 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், யாழ் சிறைச்சாலையில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றுபவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாவர்.
யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியராகச் சேவையாற்றுபவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.-
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன். கல்லூரி என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு கோரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.