இலங்கையில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு பிரிவினரின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குகின்றனர் - அமெரிக்கா அறிக்கை..!!
2021-04-02 11:32
இலங்கைச் செய்திகள்
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது சில ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு பிரிவினரின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் அரச வாகனங்களைப் பயன்படுத்தி தம்மைக் கண்காணித்து வருவதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.