+1 514-800-2610

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதும் விடுக்கப்பட்ட தடையினை முற்றாக மீளப்பெறுமாறு ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்..!!

2021-03-29 10:21
கனடிய செய்திகள்

பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மார்ச் (28)வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசிக்கும் சுமார் 35 தமிழர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இவா்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் இந்த தடை தொடர்பாக ஸ்காபறோ-ரூஜ் பார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்....


“இலங்கை அரசு 2021 ஃபெப்ரவரி 25 ஆந் திகதியிட்ட வர்த்தமானியில் பிரசுரித்த பட்டியலிடப்படுவோரின் பட்டியல் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழ்க் கனேடிய அமைப்புக்கள் சிலவும், ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதியில் வசிப்போர் உட்படத், தனிநபர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன. இலங்கைத் தீவில் முன்னர் இடம்பெற்ற மற்றும் தற்போதும் தொடரும் மனித உரிமை மீறல்களைப் புலம்பெயர் தமிழர்கள் - குறிப்பாகத் தமிழ்க் கனேடியர்களும், அமைப்புக்களும் - விமர்சிக்காதிருக்க அவர்களை மௌனமாக்குவதே இந்தத் தான்தோன்றித்தனமான பட்டியலின் நோக்கம்.

இந்தப் பட்டியல் அதில் இணைக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், பட்டியலில் இருப்போரின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் இடருக்குள்ளாக்குகிறது. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் முன்னைய மற்றும் தொடரும் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வழங்கத் தவறியமைக்காக இலங்கையைக் கவனத்தில் கொண்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்த ஒருசில நாட்களில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டமை தற்செயலானதல்ல.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் ஆயுதப்போரின் முடிவின்போது வகித்த பங்குக்காகப் போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன என்பவர் இந்தப் பட்டியலிடுதலை செயற்படுத்தியமை முரண்நகையாக அமைகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடைந்த தோல்வியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான இலங்கை அரசின் தீயநோக்குள்ள செயலாக இது அமைகிறது. மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு எதிரான இந்த நடவடிக்கை நேர்மையான சில தமிழ் அமைப்புக்களையும், தமிழ்க் கனேடியர்களையும் களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது.

பட்டியலிட்ட நடவடிக்கையை முற்றாக மீளப்பெறுமாறு நான் வலியுறுத்துவதுடன், பட்டியலிடப்பட்டோரின் இலங்கைத் தீவில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் கோருகிறேன். பட்டியலிடப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் இலங்கை மன்னிப்புக் கோருவதும் அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada