மாலை 7 மணி, மார்ச் 20, 2020 அன்று கனடிய அரசு வெளியிட்ட தரவுகளின் படி மேலும் 3,454 தொற்றுகள் பதிவாகி உள்ளத, இவற்றையும் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 930,516 ஆக உயர்ந்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின் படி கனடாவில் மொத்தம் 935,932 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது.
தொற்றிலிருத்தி இதுவரை 873,590 பேர் மீண்டுள்ளார்கள்.
இறப்புகளைப் பொறுத்தவரை 22,643 பேர் இதுவரை இறந்துள்ளார்கள், இவர்களில் 80 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள் அல்லது புதிதாக இறந்தவர்கள் என்று அரச அறிக்கை தெரிவிக்கின்றது. கனடாவில் கோவிட் தொற்றுக்குள்ளான 2.43 விகிதம் பேர் பலியாகி உள்ளார்கள்.
கனடா புதிதாக 120,344 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது, இதுவரை மொத்தம் 26,492,049 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது.
கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் மிக அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகிறது. இது ஒன்ராறியோவில் 20,086 ஆகவும் கியூபெகில் 9,767 ஆகவும் பதிவாகி உள்ளது.
அதே வேளை இறப்புகள் நேற்றைய தரவுகளின் படி ஒன்ராறியோவில் 7,223 ஆகவும் கியூபெக்கில் 10,594 ஆகவும் உள்ளது. கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் 171 இறப்புக்களும் கியூபெக்கில் 129 இறப்புக்களும் பதிவாகியது.
இந்த இரண்டு மாகாணங்களைத் தொடர்ந்து அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்த மாகாணமாக ஆல்பர்ட்டா விளங்குகிறது. அங்குக் கடந்த 14 நாட்களில் 271 கோவிட் உயிரிழப்புகளும் 45 தொற்றுகளும் பதிவாகி உள்ளது.